என் தமிழ்

கமலாக மாறுகிறார் திரிஷா

trishaa

ஏப்ரல் 6, பழைய தமிழ் படங்களை மீண்டும் புதிய வடிவில் ரீமேக் செய்யும் முயற்சி தமிழில் நடந்துள்ளது. கமல் நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியாகி சக்கைபோடு போட்டது ‘கல்யாணராமன்’ . அண்ணன் தம்பியாக டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். இப்படத்தை ரீமேக் செய்தால் கமல் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்தளவுக்கு பிரபலமானது கல்யாணராமன் கதாபாத்திரம். முன்பற்கள் தெறிக்க, ‘காதல் வந்துருச்சி.. ஆசையில் ஓடிவந்தேன்..’  என ஸ்ரீதேவி பின்னால் கமல் ஆடிப்பாடும் பாடல் சூப்பர் ஹிட். ரீமேக்காக உருவாகவுள்ள கல்யாணராமனில் கமல் வேடத்தில் நடிக்கப்போவது நடிகர் இல்லையாம் நடிகையாம். அவர் வேறு யாருமல்ல திரிஷாதான்.

Scroll to Top