நியூயார்க் காஸ் கசிந்து அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்தது

நியூயார்க் காஸ் கசிந்து அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்தது

city-on

மார்ச் 28, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மாலை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் காஸ் கசிந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தது. 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூயார்க் நகரின் மத்தியில் இருக்கும் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் உள்ள இரண்டாவது அவென்யூவில் 121ம் எண்ணில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை 3 மணியளவில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது அருகே இருந்த சமையல் எரிவாயு குழாயில் ஓட்டை விழுந்ததால், அதில் இருந்து காஸ் கசிந்து தீப்பிடித்தது. இந்த தீ பின்னர் மளமளவென்று அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் டமாரென்று வெடித்து சிதறியது. தீ விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.