த்ரிஷா என் தோழி இல்லை: லட்சுமிராய்

த்ரிஷா என் தோழி இல்லை: லட்சுமிராய்

lakshmi

மார்ச் 27, ஸ்ரீகாந்த், லட்சுமிராய் ஜோடியாக நடிக்கும் படம் சவுகார்பேட்டை. இதன் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது லட்சுமிராய் கூறியதாவது எனது கிளாமர் இமேஜை உடைக்க இப்படத்தில் நடிக்கிறேன். சென்னைக்கு வந்தால் த்ரிஷா பற்றியே என்னிடம் கேட்கிறார்கள். அவருடன் நல்ல நட்புடன் இருந்தேன். இப்போது இல்லை என்பது மட்டும் உண்மை. த்ரிஷா என் தோழி இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. அதற்கான காரணத்தை சொல்லத் தெரியவில்லை. த்ரிஷா திருமணம் செய்யப் போகும் தொழிலதிபர் வருண் மணியனை, முதலில் லட்சுமி ராய்தான் காதலித்து வந்தார் என்றும் பிறகுதான் த்ரிஷாவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே த்ரிஷாவுக்கும் லட்சுமி ராய்க்கும் பிரச்னை என்று கூறுகின்றனர்.