2016ல் த்ரிஷா திருமணம்

2016ல் த்ரிஷா திருமணம்

trisa

மார்ச் 24, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படம், இரு மொழிகளில் உருவாகும் ‘போகி’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘லயன்’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தனது மேனேஜர் தயாரிக்கும் புதுப்படத்தில் நடிக்க
உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘கதை கேட்டேன், பிடித்திருந்தது. திகில் கலந்த காமெடி படம். கோவி இயக்குகிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தவிர, மேலும் 2 தமிழ்ப் படங்களில் நடிக்க உள்ளேன்’ என்றார்.சினிமாவில் பிசியாகி விட்டதால், இந்த ஆண்டு இறுதியில் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நடக்க இருந்த திருமணம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் என்று த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.