மார்ச் 21, அரேபியா பாலைவனம் நிறைந்த பகுதி என அனைவரும் அறிந்தது. ஆனால் அங்கும் குளிர் நிறைந்த பசுமையான மனம் கவரும் இயற்கை வளங்களும் உண்டு அதில் ஒன்றுதான் மெக்கா மாகாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தாயிப் நகரம் ஆகும்.
இந்த நகரம் மலை பிரேதேசத்தில் அமைந்துள்ளது குளிர் சீதோசனமுடைய இந்த நகரம் மலர்களுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு விளையும் ரோஜா பூக்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு பூக்களை உற்பத்தி செய்ய ஏராளமான இடங்கள் இருக்கிறது. மார்ச் ஏப்ரல் மாதங்கள் பூக்களின் சீசன். இங்கு, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்காண மக்கள் குவிவார்கள்.