மார்ச் 19, இந்தோனேசியாவில் இன்று கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு இந்தோனேசியாவின் மலுக்கு தீவின் கிழக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டில் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்
