மாயமான மலேசிய விமானம் MH370 600 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை

மாயமான மலேசிய விமானம் MH370 600 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை

mh17

மார்ச் 11, மாயமான மலேசிய விமானம் MH370 தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விமானம் மாயமாகும் போது வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் பணியின் போது உறங்கியதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமான அதிகாலை 1.20 மணியிலிருந்து காலை 5.20 மணிவரையிலான காலக்கட்டத்தில் வான்வழிக் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டாளர் காலை 5.20 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரியுடன் 4 நிமிட நேர உரையாடல் செய்துள்ளார். அப்போது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி திரும்பத் திரும்ப விவரங்களைக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கட்டுப்பாட்டாளரோ, இருங்கள் நான் எங்கள் கண்காணிப்பு அதிகாரிய்யை எழுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், நீருக்கடியில் விமானம் சென்றால் அதனை கண்டுபிடிக்க உதவும் லோகேட்டரின் பேட்டரி 2012-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் இந்த இடைக்கால அறிக்கை தெரிவித்துள்ளது.