மார்ச் 11, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அரியானா மாநில கவுன்சில் இணையதளம் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.அரியானா மாநில அரசு இணையதளம் (www.scertharyana.in) ஞாயிறு அன்று ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. “ஐ.எஸ். இயக்கத்தால் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது; நாங்கள் எங்கேயும் உள்ளோம்.” என்ற தகவலும் இணையதளத்தில் இடம்பெற்று இருந்தது. இதனையடுத்து இணையதளத்தின் செயல்பாடு முடக்கப்பட்டது. அரசு இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பான தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது, சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டது.