உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 16-வது முறையாக முதல் இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 16-வது முறையாக முதல் இடம்

bill-gates_416x416

மார்ச் 3, இந்த (2015) ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான பில் கேட்ஸ் 16-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுவுள்ளார். இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் 72.7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளின் உரிமையாளராக உள்ள நிதி நிறுவன அதிபர் வாரன் பப்பெட் அறிவிக்கப்பட்டுள்ளார். பில் கேட்ஸ் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.