மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், சுரங்க பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த, ‘மெட்ரோ’ ரயிலின் டிரைவருக்கு கிடைத்த அபாய அறிவிப்பை அடுத்து, அவர் திடீரென நிறுத்தியதால், ரயில் தடம் புரண்டது. இதில், 20 பேர் இறந்தனர்; நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க, 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன; பலத்த காயமடைந்த பயணி ஒருவர், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ரஷ்யாவில் சமீபத்தில் நிகழ்ந்த மெட்ரோ ரயில் விபத்துகளில், இது மிகவும் மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.