பிப்ரவரி 28, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளில் பிணைக் கைதிகளின் தலைகளை விடியோ கேமரா முன்பு கொடூரமான முறையில் துண்டித்து கொலை செய்த ஜிகாதி ஜான் என்று அழைக்கப்பட்டவரின் அடையாளத்தை பிரிட்டனின் பி.பி.சி. ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜிகாதி ஜான் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி 26 வயது நிரம்பிய முகமது எம்வாஸி என்பராம். மேலும் அவர் குவைத்தில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அவர் கணினித் தொழில்நுட்பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிணைக் கைதிகளின் தலையை துண்டித்தவர் ஜிகாதி ஜான் என்ற முகமது எம்வாஸி
