பிப்ரவரி 27, டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி புதிய சாதனைகள் படைத்ததுடன், உலகக் கோப்பையில் தனது தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுப் பதிவுக்கும் வித்திட்டார். இப்போட்டியில் 55 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், உலகக் கோப்பையில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் வசப்படுத்தினார். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஒன்றரை சதம் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.
162 ரன் குவித்து டிவில்லியர்ஸ் உலக சாதனை
