என் தமிழ்

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம்

Palanivel

பிப்ரவரி 19, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்களை சுயேட்சைக் குழுவாக அமைத்து மறுதேர்தல் நடத்தும் வகையில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் விரைவில் அவசரக் கூட்டம் ஒன்ருக்கு அழைப்பு விடுப்பார் என டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Scroll to Top