கடலில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய நியூஸிலாந்து போலீஸ்

கடலில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய நியூஸிலாந்து போலீஸ்

sea1

பிப்ரவரி 19, ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகம் சாலையை ஒட்டிய ஆழ்கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திய 63 வயதான பெண்ணை பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் எண்ணும் போலீசார் கடலுக்குள் இறங்கி அப்பெண்ணை காப்பாற்றினர். இது குறித்து பால்வாட்ஸ் கூறியதாவது: ஆக்லேண்டில் நாங்கள் அந்தப் பெண்ணைப் பதற்றப்படாமல் காரின் பின்பகுதிக்கு வந்து, விண்ட் ஷீல்டின் இடது ஓரத்தில் பம்மிக் கொள்ளச் சொன்னோம். பின்பு பிஎம்டபிள்யூவின் விண்ட்ஷீல்டை உடைத்து அந்தப் பெண்ணை மேலே தூக்கினோம். இவையெல்லாமே வெறும் 40 விநாடிகளுக்குள் நடந்து முடிந்தது என்று அவர் கூறினார்.