என் தமிழ்

நீண்ட இடைவேளிக்குப் பிறகு தமிழில் பானு

banu

பிப்ரவரி 12, தமிழில் தாமிரபரணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பானு. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பானுவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. பிற மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் அழகர் மலை படத்தில் ஆர்.கே.விற்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது பானு நீண்ட இடைவேளிக்குப் பிறகு பாபி சிம்ஹா நடிப்பில் உருவாக இருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பானுவின் கதாபாத்திரம் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இப்படத்தில் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Scroll to Top