என் தமிழ்

ஸ்ரேயா கோஷலுக்கு, நண்பருடன் திருமணம் முடிந்தது

singer-shreya-ghoshal-3

பிப்ரவரி 7, இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் (30) தமிழ், ஹிந்தி உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியிருக்கிறார். 11 ஆண்டுகளில் 200 பாடல்களுக்கு குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார் என்றாலும் மெலடி குயின் என்ற பட்டத்திற்கு சொந்தமானவர். நேற்று ஸ்ரேயா கோஷலுக்கும், அவருடைய நீண்ட நாள் பாய்பிரண்டான ஷிலாதித்யாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஷிலாதித்யா Hipcask.com என்ற வலைத்தளத்தின் நிறுவனராக உள்ளார். ஆனால், திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை தவிர யாரையும் ஸ்ரேயா அழைக்கவில்லை. இந்த தகவலை ஸ்ரேயா தனது டுவிட்டரில் படத்துடன் வெளியிட்டுள்ளார்.

Scroll to Top