ம.இ.காவின் களங்கத்திற்கு மூலகாரணம் பாத்ரூம் பாலா: தமிழ்வாணன் சாடல்

ம.இ.காவின் களங்கத்திற்கு மூலகாரணம் பாத்ரூம் பாலா: தமிழ்வாணன் சாடல்

pa2

பிப்ரவரி 2, கட்சியில் அரங்கேறியிருக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக திகழ்பவர் இந்த பாத்ரூம் பாலா தான். ம.இ.கா வின் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் தனது வெற்றிக்காக பாத்ரூமில் இருந்து மறைமுகமாக முறைகேட்டை ஏற்படுத்த திட்டம் தீட்டி டத்தோ பாலகிருஷ்ணன் பலருக்கு தொலைபேசி வழி பேசினாரா? இவரை வெற்றி பெற வைக்கவே கட்சி தேர்தலில் தில்லுமுல்லுகள் அரங்கேறினவா? என ம.இ.கா இளைஞர் பகுதி தமிழ்வாணன் கேட்டுள்ளார்.
நாங்கள் தலைவரின் இருக்கையில் அமர்ந்தது, அவரை அவமானப்படுத்துவதற்காக அல்ல. நாங்களும் நாளைய தலைவர்களாக உருமாற வேண்டும் என்ற எண்ணத்திலும், கனவிலும் சாதாரணமாக அமர்ந்து விட்டோம். பலரின் ஆலோசனைகளுக்கு பின் அதனை பற்றி உணர்ந்து கொண்டோம் என்றார் அவர்.

இருப்பினும், எங்கள் இளைஞர் பகுதியினரை மட்டும் குறி வைத்து தாக்கி வரும் பாலா உள்ளிட்டோர் இதற்கு முன்பு குமார் அம்மான், பிரகாஷ்ராவ் ஆகியோரும் இந்த இருக்கையில் அமர்ந்து உள்ளார்கள், பத்திரிக்கைக்கு பேட்டியும் ஆகியோரும் இந்த இருக்கையில் அமர்ந்து உள்ளார்கள், பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுத்துள்ளார்களாமே! அத்தகையை சூழலில் இவர்களை கேள்வி கேட்க பாலாவுக்கு திராணி இல்லையா? அப்பொழுது அது பிரச்சனையாக எழவில்லையா? எங்களை மட்டும் விமர்ச்சிப்பது ஏன்? நாற்காலி தான் கட்சியின் பெரிய பிரச்சனையா? தேர்தலில் முறைகேடு என்று ஆர்.ஓ.எஸ் மறுதேர்தலுக்கு வித்திட்ட நிலையில் உதவித்தலைவராக இருந்த டத்தோ பாலா நமக்கென்ன என்று வாய் திறக்காமல் இருந்தாரே! இது சரியா? ஒரு வேளை தில்லுமுல்லுகளில் வந்த காரணமா? இவர் பேசாமல் இருந்ததற்கு! நாற்காலி பிரச்சனைக்கு மட்டும் இவரால் பேச முடிகிறதா? என அவர் வினவினார்.

pa1

கட்சியில் மறுதேர்தல் வர காரணமாக இருந்த, தேர்தலில் தில்லுமுல்லுகளை அரங்கேற்றியவர்களை விட நாங்கள் கட்சிக்கு பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டோமா? எங்கள் இளைஞர் பகுதி கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும், அதிகமாக போராடி வருகிறது. அதோடு நாட்டு நலப்பணித்திட்டங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறது.
இது அறியாத கோமாளிகள் தங்களின் சுயநல அரசியலுக்காக எங்களை பற்றி தவறாக விமர்சனம் செய்து சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். அது பரவஎங்களை பற்றி தவறாக விமர்சனம் செய்து சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். அது பரவாயில்லை அதே போல் இவர்கள் கட்சியில் ஓராண்டுக்கு மேலாக தொடரும் பிரச்சனைகளுக்கும் நல்லதொரு முடிவுகட்டவும் முயல வேண்டும். மாறாக வெட்டித்தனமாக சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி ம.இ.கா வின் விவகாரத்தை திசை திருப்ப நினைக்காதீர்! என தமிழ்வாணன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.