ஜனவரி 31, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வெளியே இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ.100க்கு 4 லட்டுகளும் விநியோகிக்கப்படுகிறது. இந்த லட்டுகளை கொண்டு செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் ரூ.2 க்கு விற்கப்படுகிறது. தற்போது தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், 8 லட்டுகள் வாங்கும் பக்தர்களுக்கு இலவச பிளாஸ்டிக் பை (கவர்) வழங்க உத்தரவிட்டார்.
Previous Post: 9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாடு பிரதமர் திறந்து வைத்தார்
Next Post: ரசிகர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார்