ஜனவரி 30, விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களுமே வசூலில் ரூ 100 கோடியை தாண்டியது. இந்நிலையில் நேற்றுடன் கத்தி படம் 100 வது நாளை கடந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘ நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை, அதற்கும் மேல் உங்களுக்கு நான் அதிகம் கடமை பட்டுள்ளேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
ரசிகர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார்
