இந்தியாவுடன் நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது

இந்தியாவுடன் நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது

pm

ஜனவரி 29, பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு இந்தியா மிகவும் முக்கியமான அண்டை நாடு என்றும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து நவாஸ் ஷெரீப் மேலும் கூறும்போது, “இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான அண்டை நாடு. பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது.ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை போன்ற நீண்ட கால சர்ச்சைகளுக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டியது அவசியம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.