ஜனவரி 29, அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தபோது, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, பந்த் கலா எனும் கருப்பு நிறத்தினாலான கோட்–சூட் அணிந்திருந்தார். அந்த கோட்டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அந்த கோடு போன்ற வரிசையில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி எனும் மோடியின் முழுப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பிரதமர் மோடி, ஒபாமாவை சந்தித்த போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிரத்யேக உடையை அணிந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை எதிர்த்து பொதுமக்கள் காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தன்னை அலங்கரித்து கொள்வதை கைவிட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் மோடி ஆதரவாளர்கள், இது தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது போல உள்ளது என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
Previous Post: மஇகாவில் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது: பி.கமலநாதன்