டெல்லி : நிலக்கரி சுரங்க முறைக்கேடு புகார் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு 1,86,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய இந்த புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழி காட்டுதலின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் மன்மோகன் சிங் நிலக்கரி இலக்காவை கவனித்து வந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ அது தொடர்பாக ஆவணங்களை சேகரித்துள்ளது.
Previous Post: நாம்(NAAM) இயக்கத் திட்டங்களுக்கு பாராட்டு