சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

same

ஜனவரி 24, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த மர்ம பார்சலை போலீசார் பார்த்து அதை சோதனை செய்தனர்.

அதில் செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அதை மீட்டு சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சென்னை தலைமையிட வனத்துறை வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் திலீப் ஆகியோர் கூறியதாவது:-

இந்த செம்மரக்கட்டைகளை சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு ஹவுரா அல்லது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்வதற்காக மோட்டார் உதிரிபாகங்கள் என்று ‘புக்கிங்’ செய்து இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துவிட்டோம். அதன் எடை 68½ கிலோ இருக்கும். மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. பார்சல் ‘புக்கிங்’ செய்த முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. செம்மரக்கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டோம்.