ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்க உதவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டம்

ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்க உதவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டம்

teacher

ஜனவரி 24- சபாவில் பணிப்புரியும் ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்கும் வகையில் உதவி ஆசிரியர்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார்.
குறிப்பாக சபாவில், சண்டகான் தலைநகரத்தில் குடாட் மற்றும் கெனிங்காவ் பகுதியில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்த போவதாக தான் ஸ்ரீ முகிதின் கூறினார்.
மேலும், பள்ளிகளில் பதியும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒட்டியே உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்பதை தெளிவுப்படுத்திய முகிதின், 500 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் 501-லிருந்து 1350 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு 3 ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனிடையே, ஆசிரியர்கள் தங்களின் பணியை நன்கு புரிந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் ஒரு தலைச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சபா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் துணை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான தான் ஸ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார்.