ஜனவரி 23, ஆர்.ஓ.எஸ். விவகாரங்கள் குறித்து கட்சியின் துணைத் தலைவர் உட்பட சில தரப்பினரும் பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதையும் நான் அறிவேன். மஇகாவின் சட்டவிதிகளுக்கு ஏற்ப கட்சியின் துணைத் தலைவர் உட்பட மற்ற தரப்பினருக்கு நான் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை.
ஆர்.ஓ.எஸ். விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறும், எந்த கூட்டத்திற்கும் தலைமை ஏற்குமாறும் கட்சியின் துணைத் தலைவர் உட்பட மற்ற தரப்பினருக்கு நான் ஒருபோதும் அனுமதி வழங்கியது இல்லை.
பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதைத் தடுப்பதற்கு இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அன்புடன் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல்