ஜனவரி 23, மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று நேற்று முன்தினம் இரவு டிவி3 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் ஐஎஸ், இசிஸ் மற்றும் இசில் போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும், நாட்டிற்கும், மக்களுக்கும் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் நஜிப் எச்சரித்துள்ளார்.
பாரிஸ் மற்றும் சிட்னியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கக்கூடும். எனவே அது போன்ற சம்பவங்கள் இங்கு நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்படுவதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.