ஜனவரி 23, ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் அஹ்மாட் சாயிட் ஹமிடி ரோஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் ஜி.குமார் அம்மானை மஇகாவின் தலைமைச் செயலாளராக ஜி.பழனிவேல் நியமித்தார். ஆனால், ரோஸ் அந்த நியமனத்தை அங்கீகரிக்க மறுத்துள்ளது.
இதன் தொடர்பில் “நான் இறுதி மூச்சு வரையில் இங்கே இருப்பேன். நான் இந்திய சமூகத்திற்காக இறப்பேன்”, என்ற உறுதிமொழியுடன் மஇகாவின் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அம்மான் அவரது உண்ணா விரதத்தை புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்திற்கு (ரோஸ்) வெளியில் தொடங்கினார்.
மேலும் உள்துறை அமைச்சுக்குத் மகஜர் ஒன்றையும் வழங்கினார். இதில் ம.இ.கா கட்சித் தேர்தல் விவகார விசாரணையில் சம்பந்தப்பட்ட ரோஸ் தலைமைச்செயலாளர் உட்பட அதன் அதிகாரிகள் அனைவரையும் பதவி விலகச் செய்யும் வரை தாம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும் பதிவிலாகா எடுத்த நடவடிக்கைகளில் ம.இ.காவிற்குத் திருப்தி இல்லை என்றும் அந்நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லாமலும் சட்டத்திற்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மகஜரில் தெரிவித்துள்ளார்.
“இதன் தொடர்பில், ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் அஹ்மாட் சாயிட் ஹமிடி சங்கங்களின் பதிவிலாகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.