அமெரிக்காவில் 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்

அமெரிக்காவில் 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்

ffd

ஜனவரி 21, அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினான்.

அதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிப்பார்கள் என்றனர். அது குறித்து ஆன்லைனில் பார்த்த போது அந்த மிஷினின் விலை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் (2 ஆயிரம் டாலர்) என தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை தயாரித்தான். அதை அவன் பல நாள் இரவு கண் விழித்து உருவாக்கினான். அதை தான் அறிவியல் கண்காட்சியில் வைத்து பாராட்டு பெற்றான்.

தற்போதுள்ள பிரெய்லி பிரிண்டர் 9 கிலோவுக்கு மேல் எடை உள்ளது. ஆனால் சுபம் பானர்ஜி தயாரித்துள்ள பிரிண்டர் மிக குறைந்த எடை கொண்டது. மேலும் விலையோ மிகவும் குறைவு அதாவது ரூ.15 ஆயிரம் மட்டுமே.

இதற்கிடையே சிறுவன் சுபம் பானர்ஜி ரூ.20 லட்சம் முதலீட்டில் புதிதாக சிறிய கம்பெனி தொடங்கி தொழில் அதிபர் ஆகி இருக்கிறான். அவனுக்கு தந்தை உதவியாக இருக்கிறார்.