ஜனவரி 21, அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 1999-ம் ஆண்டை போல வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாகவும் கூறினார். வேலைவாய்ப்பின்மை சதவீதம் கடந்த நிதி ஆண்டை விட தற்போது குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கான காலகட்டம் இது என்றார்.
மேலும் பேசிய அவர் 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். கடினமாக உழைப்போருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற அவர், கச்சா எண்ணெய், காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.