ஜனவரி 21, கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் குபாங் கெரியானில் உள்ள மலேசிய விஞ்ஞானப் பல்கலைக் கழக மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மைய சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்ததாகவும் நிக் அப்டு தெரிவித்துள்ளார். நிக் அசிசின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாக மலேசிய விஞ்ஞானப் பல்கலைக் கழகத்தின் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பிற்பகல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த 23 ஆண்டுகளாக செம்பாக்கா சட்டமன்ற உறுப்பினராகவும் நிக் அசிஸ் சேவையாற்றி வந்துள்ளார். 2013இல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிளந்தான் மந்திரி பெசார் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
13வது பொதுத் தேர்தலில் அவர் 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்தார்.