ஜனவரி 20, திரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் 23ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதையொட்டி அவருக்கு வருண் விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அதை மாற்றி புதிய பரிசளிக்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி வருண் தனது இணையதள பக்கத்தில் கூறும்போது,‘திரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக நான் தரப்போவது என்ன என்பதுபற்றி வெவ்வெறு தகவல்கள் வருகிறது. ஆனால் 1000 விலங்குகளை தத்தெடுத்து அவற்றுக்கு உணவு, வசிப்பிடம் மற்றும் மருத்துவ உதவியை ஒரு வருடம் தர முடிவு செய்துள்ளேன். இந்த பரிசை திரிஷா மதித்து ஏற்பார் என்று நம்புகிறேன். கார் பரிசளிப்பதைவிட இதுவே அவருக்கு சந்தோஷம் அளிப்பதாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். நிச்சயதார்த்த சந்தோஷம் ஒருபுறம், புது படங்கள் ரிலீஸ் சந்தோஷம் மறுபுறம் என திரிஷா ஹேப்பியாக இருக்கிறார். அவர் நடிப்பில் பூலோகம், என்னை அறிந்தால் மற்றும் லயன் (தெலுங்கு) ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.
திரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக நான் தரப்போவது 1000 விலங்குகலுக்கு உதவி
