கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது

கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது

rain34

ஜனவரி 18, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி ஹய்யா தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரை 25 பேர் மட்டுமே இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.ஆனால் தற்போது 94 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடுமையான காய்ச்சல், தலை வலி, வாந்தி, இரும்பல், கண் வலி, வயிற்று வலி, பேதி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுமாம். இவ்வாறு அறிகுறிகள் ஏற்படும் மக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை சென்று சிகிச்சை பெறும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் இந்நோயால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சுவார அமைப்புகளையும் கடுமையாகப் பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி ஹய்யா தெரிவித்துள்ளார்.
இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மிக கவனமாக இரும்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதோடு முடிந்தவரை சுத்தமான நீரையே பயன்படுத்தும் படி வலியுருத்தப்பட்டுள்ளனர். மேலும் தங்களது கை மற்றும் கால்களில் புண்கள் ஏற்பட்டுள்ளவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டுமாம். அவ்வாறு புண்கள் உள்ளவர்கள் சுத்தமான துணிகளைக் கொண்டு தங்களது புண்களைச் சுற்றி கட்டுப் போடும் படியும் முடிந்தவரை அசுத்தமான நீர் தேக்கம் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.