என் தமிழ்

ஹீரோயின் வேடம் பூர்ணா டோன்ட் கேர்

purna

இரண்டாவது ஹீரோயின் வேடத்தில் நடிப்பது பற்றி கவலை இல்லை என்றார் பூர்ணா ஈரம், கந்தகோட்டை, துரோகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் விஜய்யை மணந்த அமலா பால் மலையாள படம் மில்லியில் ஹீரோயினாக நடிக்கிறார். 

இதில் 2-வது நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பூர்ணா. இதுபற்றி அவர் கூறும்போது, மில்லி படத்தில் 2-வது ஹீரோயினாக நடிக்கிறேன். கதை அமலாவை சுற்றியே சுழல்கிறது. தெலுங்கில் நடித்திருந்த அவ்னு படம் ஹிட் ஆனது. இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தில் நடித்த நட்சத்திரங்களே இதிலும் நடிக்க உள்ளனர். 

நான் ஹீரோயின் வேடம் ஏற்றிருக்கிறேன். பெண்ணை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோயினா, 2-வது ஹீரோயினா என்று பார்ப்பதில்லை. நடிப்பதற்கான வாய்ப்புள்ள கதாபாத்திரமாக இருந்தால் ஒப்புக்கொள்கிறேன். தேசியவிருது பெற்ற ராஜேஷ் டச்ரிவர் இயக்கும் புதிய தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளேன். தமிழில் நடிக்க கதை கேட்டு வருகிறேன் என்றார்.

Scroll to Top