புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

x

ஜனவரி 1, சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சீனாவில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபமான சென்யி சதுக்கத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் மோசமான விளைவுக்கு எடுத்து சென்றுவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்க டாலரை போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. இதனை பார்த்த புத்தாண்டு கொண்டாடிய மக்கள் அடித்து, பிடித்து அதனை எடுக்க முந்தி சென்றனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சில கூப்பன்கள் அமெரிக்க டாலர் போன்று இருந்தது, அவை அனைத்தும் பண்ட் பகுதியில் இருந்த வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்டது. அப்போது ஆற்றின் கரையோரம் நின்ற மக்கள் அதனை எடுக்க முயற்சி செய்தனர். இதனால் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். என்று தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தூண்டியது என்னவாக இருக்கும் என்பது உடனடியாக தெளிவாகவில்லை. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.