ஜனவரி 1, ஆஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் கவரபட்ட இடங்கள் ஆகும். இந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3ல் ஒருவருக்கு புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். அதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு சூரிய குளியலுக்கு தடை விதித்துள்ளது.
புற்றுநோயால் அதிகம் பாதிக்கபட்டவர்கள் உள்ள நாடு ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடதக்கது.
இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு வலியுறுத்தி வந்தது குறிப்பிடதக்கது.