டிசம்பர் 31. கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவினர் களத்தில் இறங்கி உதவி புரிவது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது ம.இ.கா இளைஞர் பிரிவின் பணிப்படை உறுப்பினர்கள் சுபாங்கில் இயங்கும் ஆகாய விமானப்படை தளத்தில் அரசு மலேசிய ஆகாயப்படைக்கு வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுகளும், தேவையான பொருட்களும் தயார் செய்து கொடுப்பதில் அரசு சாரா இயங்களுடன் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் எல்லா மாநிலங்களிலும் ம.இ.கா இளைஞர் பிரிவினர் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பொருட்களையும் நிதியையும் பெற்று வருகின்றனர். இவர்களுடைய இச்சேவையை பாராட்டி நாட்டின் துணைப்பிரதமர் குவாந்தானில் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவினரை சந்தித்தப் போது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இப்பொழுது இவர்களுடைய ஈடுப்பாட்டிற்கு உற்சாகமுட்டும் வகையிலும், பொருளாதார ரீதியில் ம.இ.கா இளைஞர் பிரிவினரின் நிவாரண நிதியை ஆதரிக்கும் வகையிலும் ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும், தென்கிழக்காசிவிற்கான மலேசிய சிறப்பு தூதர் ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு அவர்கள் ரிங்கிட் மலேசிய ஒரு லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். அவருடன் ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களும் ரிங்கிட் மலேசியா ஒரு லட்சத்தை ம.இ.கா இளைஞர் பிரிவிற்கு நன்கொடை அளித்துள்ளார்.
டத்தோ ஸ்ரீ உத்தாமா கூறுகையில் நமது கட்சியை பிரதிநிதித்து நமது இளைஞர் பிரிவினர் களத்தில் இறங்கி வேலை செய்யும் பொழுது அவர்களின் தோள்தட்டி உற்சாகமூட்ட வேண்டியது நமது கடமையாகும் என்றார். அதுமட்டுமின்றி இம்மாதிரியான இளைஞர் பிரிவினரின் செயற்பாடுகள் ம.இ.காவிற்கு நற்பெயரை ஈட்டித் தரும் என்பதில் ஜயமில்லை என்றார்.
இதுக்குறித்து ம.இ.கா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் சகோதரர் சிவராஜ் சந்திரன் கூறுகையில், களத்தில் இறங்கி வேலை செய்ய எங்களிடம் இளைஞர் படை உண்டு, சக்தி உண்டு, திறமை உண்டு. ஆனால் பொருளாதார பலம் மட்டுமே எங்களிடம் இல்லை.ஆக எங்களது தேவையறிந்து உதவிச் செய்த டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்களுக்கும் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களுக்கும் இளைஞர் பிரிவினரின் சார்பில் இவ்வேளையில் நன்றினைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார். நிச்சயமாக வெள்ளதால் பாதிக்கபட்ட மக்கள் அனைவருக்கும் நாங்கள் இயன்ற உதவிகளை செய்வோம் உதவி தேவைப்படுவோர் தயவு கூர்ந்து 019-2070460 என்ற எண்களில் எங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.