பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்

பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்

020502-D-2987S-027

டிசம்பர் 31, 162 பயணிகளுடன் சுராபாயாவிலிருந்து காலை 5.20 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஆசியாவின் QZ8501 விமானம் தொடர்பிழந்து காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது ஜாவா மத்திய கடல் பகுதியில் இதுவரை 40 உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுவரை 40 உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட போதிலும் இத்தேடல் பணிகள் தொடர்ந்து நிறைவேறிக்கொண்டு தான் இருக்கும் என பிரதமர் கூறினார். “அன்புக்குரியவர்களை இழந்து வாழ்க்கையில் கடுமையான துயர் சோதனையை எதிர்க்கொண்டிருந்தாலும் தொடர்ந்து தைரியமாக இருக்க வேண்டும்” என பிரதமர் பயணிகளின் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.