இந்தோனேஷியா சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தோனேஷியா விமானம் நடுவானில் பயணம் செய்யும் போது தொடர்பை இழந்துவிட்டதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சுரபயா நேரப்படி காலை 7.24 மணிக்கு QZ8501 எண் கொண்ட A320-200 ஏர்பஸ் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தனது தொடர்பை இழந்தது.
16 சிறுவர்கள் 1 குழந்தை 138 பெரியவர்கள் என 155 பயணிகளும், 2 விமானி மற்றும் 5 விமான பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக ஏர் ஏஷியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 1 சிங்கப்பூர், 1 மலேசியா, 1 ப்ரான்ஸ், 3 தென் கொரியா மற்றும் 156 இந்தோனேஷியர்கள் எனவும் ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்து பற்றிய விவரம் வேண்டுவோர் வசதிக்காக +622129850801 என்ற தொலைபேசி எண்ணை ஏர் ஏசியா விமான நிறுவனம் தொடர்புக்காக கொடுத்துள்ளது.
இந்தோனேசியா சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.