டிசம்பர் 27, கம்போங் செப்பாட்டில் ஒரு நவீன பண்றி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக சுமார் 100 கிராம் மக்களும், மலாய் உரிமை போராட்ட அரசு சார்பற்ற அமைப்பு பெர்காசாவும் இன்று சிலங்கூர் மாநில மந்திரி புசாரிடம் ஒரு புகார் தெரிவித்தனர்.
நாங்கள் மற்ற மதத்தினர் பன்றி இறைச்சி உண்பதை எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளைடத்தில் அதிக பண்ணாகள் இருப்பதை எதிர்க்கிரோம் என தெரிவித்தனர்.
முன்பு இரண்டு அல்லது மூன்று பண்ணைகள் இருந்தன. ஆனால், இப்போது இக்கிராமத்தில் 62 க்கும் அதிகமான பண்ணைகள் இருக்கின்றன” என்று லாடாங் தும்போக் கிராமத் தலைவர் முகமட் தார்முடி துஷிரான் கூறினார்.
பன்றி இறைச்சியை உண்ணும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் பன்றி பண்ணைகளைக் கட்ட வேண்டும் என்று சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பாக்கார் யாயா வலியுறுத்தினார்.
இந்த இடத்தில் வேண்டாம், மலாய்க்காரர்கள் இருக்கும் இடத்தில் கூடாது. பன்றி என்றால் மலாய்க்காரர்களுக்கு வெறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அரசங்கம் ஒன்றை அமல்படுத்தினாலும், மக்களுக்கு அதை எதிர்க்கும் உரிமை உண்டு”, என்றாரவர்.