என் தமிழ்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 புதிய பாலிடெக்னிக் கல்லுரிகள் துவங்க திட்டம்: ஸ்மிருதி இராணி

smiruthi erani

நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- டந்த ஐந்தாண்டு கால கட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 127 தனியார் பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தரமற்ற பேராசிரியர்கள் போன்றவற்றால் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. அவைகள் மறு சீரமைக்கப்படும். மேலும் அஸாம், அருணாசலபிரதேசம், ம.பி., உ.பி. உட்பட  நாடு முழுவதும் 222 பாலிடெக்னிக் கல்லூரிகள் புதிதாக துவங்கப்படும் எனவும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Scroll to Top