உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் : ராம்விலாஸ் பஸ்வான்

உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் : ராம்விலாஸ் பஸ்வான்

RAM

புதுடெல்லி: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் நேற்று விலைவாசி தொடர்பான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உணவு தானியங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக கோரினார். அதிகரித்து வரும் நிலையில் பதுக்கல்காரர்களே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

அதே நேரத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு சில பொருட்களின் விலையை எதிர்வரும் காலங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் பஸ்வான் கூறினார். வெங்காயம், உருளைகிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய பஸ்வான் அவற்றின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிகாட்டினார். 

நடப்பாண்டில் பருவ மழை பொய்த்ததாலும், விலைஉயர்வை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் உணவுப் பொருட்களை பதுக்குவோர் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். எனினும் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.