டிசம்பர் 23, கடும் மழை காரணமாக திரங்கானு முழுவதும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பசார் வாவாசான், பசார் பாயாங், வாட்டர்ஃப்ரோண்ட், புலாவ் வரிசான், புலாவ் கம்பிங் மற்றும் பத்து புருக் ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்து கொண்டிருந்த கனத்த மழையினால் இரவு 9 மணி தொடங்கி வெள்ளம் ஏற ஆரம்பித்ததாக பசார் பாயாங் பகுதியில் வியாபாரம் செய்யும் அபு பாக்கார் தெரிவித்தார். கடந்த 20 வருடங்களில், இப்பகுதி வெள்ளத்தில் மூழ்குவது இது இரண்டாவது முறை என அபு பாக்கார் மேலும் கூறினார்.
இந்நிலையில், வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதிகளை ஆக்கிரமித்ததால், முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடிந்தது என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Previous Post: நோயாளிகளின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டங்கள்
Next Post: பெற்றோரை இழந்த மாணவி PT3 தேர்வில் சாதனை