நோயாளிகளின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டங்கள்

நோயாளிகளின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டங்கள்

Malaysia-hospital_ST

டிசம்பர் 22, தற்போது பினாங்கு அரசாங்க மருத்துவமனையில் நோயாளிகளின் நெருக்கடியைத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் அமலுக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக, 2016-ஆம் ஆண்டிற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும், இங்குள்ள பிரசவ மருத்துவமனை முழுமையாக காலி செய்யப்பட்டு பினாங்கு மருத்துவமனையின் வளாகத்திலே அமைக்கப்படவுள்ளதாகவும் டாக்டர். எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் நான்கு ஆண்டுகளில் அது நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிதாய் கட்டப்படும் மருத்துவமனையில் மேலும் 329 கட்டில்கள் அமைக்கப்படும் என்றும் இந்த வேலைகள் அனைத்தும் 2020-க்குள் முடிவடையும் என்று டாக்டர். எஸ்.சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.