மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்

maoists1

டிசம்பர் 22, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் வனத்துறை அலுவலகத்தில் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி, முக்காலி என்ற இடத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்குள் நள்ளிரவு 1.30 அளவில் புகுந்த மாவோயிஸ்ட்டுகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜீப் ஒன்றை தீ வைத்து எரித்தனர். அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்து சூறையாடினர்.

அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசி அவர்கள் பின்னர் அங்கு இருந்து தப்பிச்சென்றனர். இதனையடுத்து அட்டப்பாடியில் போலீசார் குவிக்கப்பட்டு மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. 30-ம் தேதி அட்டப்பாடி மலை கிராமங்களில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிரான மாவோயிஸ்ட்டுகள் சுவர்ரோட்டிகள் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.