கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களில் கடும் வெள்ளம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம்

கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களில் கடும் வெள்ளம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம்

monsoon-malaysia-2

டிசம்பர் 19, கடந்த சில வாரங்களாக கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிளந்தானில் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் 15000 பேர் 108 பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திரங்கானுவில் மழை குறைந்திருந்தாலும் வெள்ளத்தின் நீர்மட்டம் இதுவரை குறையாமல் இருப்பதால் இன்று காலை 2438 குடும்பங்களைச் சேர்ந்த 8,595 பேர் 114 பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம் புகுந்திருப்பதாக திரங்கானு மாநில தேசிய வெள்ள நிவாரணக் குழு தெரிவித்தது.
இதனிடையே, பகாங்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1586-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இன்று காலையில் புதிய பாதுகாப்பு மையம் ஒன்று அப்பகுதியில் திறந்திருப்பதாக குவாந்தான் துணை போலீஸ் அதிகாரி அப்துல் அசிஸ் சாலே தெரிவித்தார்.