டிசம்பர் 18, புனித திருமணத்துக்கு மறுத்த 150 பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்ததாக ஈராக் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, தனது இயக்கத்தில் உள்ளவர்களை புனித திருமணம் (ஜிகாத் எல்-நிக்காஹ்) செய்ய வேண்டும் என்று பெண் களை கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கு ஒப்புக்கொள்ளாத 150 பெண்களை இந்த அமைப்பு கொடூரமாக கொலை செய்துள்ளது. மேற்கு ஈராக் மாகாணத் தில் உள்ள அல்-அன்பர் பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது என்று ஈராக் கின் மனித உரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிகளை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இங்கு குடியேற்றப்பட்டவர்கள். கொலை செய்த அனைவரையும் ஒரே இடத்தில் புதைத்துள்ளனர். மேலும் பெற்றோர் இன்றி ஆதரவின்றி தவிக்கவிடப்பட்ட குழந்தைகளும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.