டிசம்பர் 18, அரசாங்கத்தின் முன்னாள் உயர் நிலை ஊழியர்களும் அமைச்சர்களும் தங்கள் சொத்துகளை பற்றி அறிவிக்க வேண்டும் என பெர்காஸா கோரிக்கை விடுத்துள்ளது. பெர்காஸா உச்சமன்ற அங்கத்தினர் அஸ்ரூல் அக்மால் ஷஹாருடின் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார். பெர்காஸாவின் உதவி தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் நேற்று முன் தினம் அரசங்கத்தை சாடியிருந்தார். இதை பற்றி குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் ஸாஹிட் அந்த முன்னாள் ஊழியரின் சீறலுக்கு காரணம் அவருக்கு சம்திங் கிடைக்காததாக இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி குறிப்பிட்ட அஸ்ரூல் ஸாஹிட்டின் கருத்திலிருந்து பல முன்னாள் உயர் அரசு அதிகாரிகள் பெரிய திட்டங்களின் மூகமுன் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களில் பதவியில் உள்ளதன் மூலமும் சம்திங் பெறுகின்றனர் என்பதை காட்டுகிறது என்றார் அவர். எனவே எல்லா முன்னாள் அரசாங்க உயர் அதிகாரிகளும் சொத்தின்மதிப்பை வெளியிட வேண்டும்.