யாரை வைத்து மத்திய செயலவைக் கூட்டத்தை ஶ்ரீ ஜி.பழனிவேல் நடத்தப்போகிறார்: டி. மோகன்

யாரை வைத்து மத்திய செயலவைக் கூட்டத்தை ஶ்ரீ ஜி.பழனிவேல் நடத்தப்போகிறார்: டி. மோகன்

logo

டிசம்பர் 17, ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தின் போது தாம் நீதி போராட்டம் நடத்தவிருப்பதாக ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மலாக்காவில் நடைபெற்ற ம.இ.கா கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதால் ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து, அண்மையில் இப்புகாரை விசாரித்த ஆர்.ஓ.எஸ் மறுதேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு ம.இ.காவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.
இக்கடிதத்தைப் படித்த டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், மத்திய செயலவை கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்துவிவாதித்த பிறகு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார்.
இவ்வேளையில் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவேன் என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார். ஆர்.ஓ.எஸ் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் எதுவும் செல்லாது. அதனால் தேர்வு செய்யப்பட்ட உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களின் பதவி காலியாகியுள்ளன. ஆகையால் யாரை வைத்து மத்திய செயலவைக் கூட்டத்தை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நடத்தப்போகிறார் என்று தெரியவில்லை என டி. மோகன் தெரிவித்தார்.
கட்சி விதிகள் , ஆர்.ஓ.எஸ் வெளியிட்ட முடிவுகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர்கள் அந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்கான அழைப்புகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆகையால் நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாங்கள் முயற்சி செய்வோம். அதே நேரத்தில் நாளை டிசம்பர் 18-ஆம் தேதி ம.இ.கா தலைமையகம் முன்பு மறுதேர்தல் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரும் கண்டனப் போராட்டத்தையும் நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.