பெண்ணுக்கழகு பட்டுப்புடவை

பெண்ணுக்கழகு பட்டுப்புடவை

tamanna-in-saree

டிசம்பர் 12, தமன்னாவுக்கு மாடர்ன் உடைகளை விட, புடவைகளே அதிகமாகப் பிடிக்கிறதாம். மும்பை வீட்டில் தோழிகளுடன் அரட்டையடிக்க ஆரம்பித்தால், புடவைகளைப் பற்றி பெரிய லெக்சர் கொடுக்கிறாராம். “பெண்ணுக்கு புடவை தரும் அழகை விட வேறெந்த உடையும் பாந்தமாக இருக்காது.

எனக்கு புடவை அணிவது ரொம்ப பிடிக்கும். அதிலும் பட்டுப் புடவை என்றால் கொள்ளை ஆசை” என்று சொல்லியிருக்கும் அவர், காஞ்சிப் பட்டு வகையறாக்களை பீரோ முழுக்க நிரப்பி வைத்திருக்கிறாராம். படங்களில் மாடர்ன் உடை கொடுத்தால், முகம் சுளிக்காமல் அணிந்து நடிக்கிறார்.