யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் தொடங்கியது

யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் தொடங்கியது

elephant

டிசம்பர் 12, தமிழக கோயில் மற்றும் மடத்திற்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முகாம், கோவை அருகே மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நேற்று தொடங்கியது. இதில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த சுமார் 30 யானைகள் பங்கேற்றுள்ளன. முகாமை அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், சட்ட அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்து யானைகளுக்கு பழங்கள், கரும்பு வழங்கினர். முகாம் துவங்கியதும் யானைகளுக்கு அரிசி, பாசிப்பயறு, கொள்ளு, ராகி ஆகியவை கலந்த சாதம் வழங்கப்பட்டது. கூந்தல் பனை, தென்னை மட்டை, புல், கரும்பு, சோளத் தட்டு ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணை யாளர் தனபால் கூறுகையில், ‘‘முகாம் 48 நாட்களுக்கு நடக்கி றது. தமிழகத்தில் கோயில் மற்றும் மடத்துக்கு சொந்தமாக 45 யானைகள் உள்ளன. இதில், 30 யானைகள் கலந்து கொள்கின்றன. வர முடியாத 15 யானைகளுக்கு இருக்கும் இடத்திலேயே சிகிச்சையும், ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து உணவுகளும், பாகன்களுக்கு தேவையான உணவுகளும் தயாராகவுள்ளன’ என்றார்.